தொடரும் லாரி ஸ்டிரைக்: ரூ. 5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு


டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி இரண்டாவது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், மூன்றாம் நபருக்கான காப்பீட்டுத்தொகையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதன் காரணமாக லாரி உரிமையாளர்க ளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 250 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல், ஒரு நாளைக்கு சுமார் 5000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமின்றி, நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS