வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்


மூன்றாம் நபர்களால் பழுதுநீக்கப்பட்ட போன்களுக்கு சேவை வழங்க மறுத்தது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு 45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் மூன்றாம் நபர்களால் பழுதுநீக்கப்பட்ட சில ஐபோன்களின் மென்பொருளை அப்டேட் செய்தபோது செயலிழந்து போயின. எரர் 53 என அறியப்பட்ட இந்த பிரச்னை தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தை அணுகிய போது, மூன்றாம் நபர்களால் போன் பழுதுநீக்கம் செய்ததாலேயே போன்கள் செயலிழந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 275 வாடிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது உரிமைகள் குறித்து தவறாக தகவல் அளித்ததாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதமாக விதித்தும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகையை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS