பினாமி பரிவர்த்தனை பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு!


சட்டவிரோத பினாமி பரிவர்த்தனை மற்றும் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசளிக்கும் திட்டத்தை வருமானவரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் பினாமி பரிவர்த்தனைகள் குறித்து தகவலளிப்போர் பரிசு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பி ன்படி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கக் கூடிய பினாமி பரிவர்த்தனை மற்றும் சொத்துகள் தொடர்பாக வெளிநாட்டினர் உட்பட யார் வேண் டுமானாலும் பினாமி பரிவர்த்தனை தடுப்பு பிரிவு இணை அல்லது துணை ஆணையர்களிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள முறையில் சரியான தகவல் அளிப்போருக்கு ஒரு கோடி ரூபாய் வரை பரிசாக அளிக்கப்படும் என கூறப்பட்டுள் ளது. தகவல் அளிப்பவரை குறித்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பாகத் தகவல் தகவல் தெரிவிப்பவருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசாக அளிக்கப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளிலிருந்து தகவல் அளிப்போரை கவர்வதற்காகவே பரிசுத் தொகை 5 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக் கப் பட்டுள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS