முட்டை விலை திடீர் உயர்வு


முட்டை விலை திடீரென 55 காசுகள் உயர்ந்துள்ளது. 

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒவ்வொரு வாரமும் மூன்று கிழமைகள், நாமக்கல்லில் கூடி முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், முட்டை உற்பத்தி உட்பட பல்வேறு நிலவரங்கள் குறித்துப் பேசப்பட்டன. பின்னர்  முட்டைக்குப் புதிய விலை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

அதன்படி, முட்டை விலை 55 காசுகள் உயர்ந்து 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முட்டை ஒன்றின் கொள்முதல் விலை, 3 ரூபாய் 95 காசுகளில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வரும் நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS