புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை


பெட்ரோல் விலை சென்னையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 79.55 காசுகளுக்கு விற்கப்பட்டது. சென்னையில் இதுவே அதிகபட்ச பெட்ரோல் விலையாகும் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 71.55 காசாக குறைந்தது. தொடர்ந்து இறங்குமுகத்தில் காணப்பட்ட பெட்ரோல் விலை 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ 61‌. 46 காசாகவும், 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ 63.02 காசாகவும் விற்கப்பட்டது. 

இதன்பின், ஏற்றப்பாதைக்கு மாறிய பெட்ரோலின் விலை கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ 71.78 காசாக இருந்தது. இந்நிலையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 79.47 காசாக இருந்தது. அது இன்று காலை 32 காசு அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ 79.79 ஆக  உயர்ந்துள்ளது. டீசல் விலை 28 காசு உயர்ந்து ஒரு லிட்டர் ரூ 71.87 காசுக்கு விற்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS