பெட்ரோல் விலை இன்று மேலும் உயர்வு


பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது.

  மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதாவது கடந்த ஏப்ரல் 24ஆம் தேதிகளில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. கர்நாடகத் தேர்தலை முன்னிட்டே பெட்ரோல்,‌டீசல் விலையில் தினசரி மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பலதரப்பினரும் புகார் கூறி வந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதியே மாற்றம் செய்யாமல் இருந்ததாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது‌‌.

கர்நாடகாவில் மே 12ஆம் தேதி தேர்தல் வாக்கெடுப்பு முடிந்த நிலையில் பெட்ரோல் விலை உயரத் தொடங்கியது. மே14ஆம் தேதிகளில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இந்நிலையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 
 

POST COMMENTS VIEW COMMENTS