5 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல் விலை உயர்வு


பெட்ரோல் விலை 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக இன்று விலை உயர்ந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சவிலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய் 55 காசுகளுக்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 71 ரூபாய் 55 காசாக குறைந்தது. தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்பட்ட பெட்ரோல் விலை 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் 61‌ ரூபாய் 46 காசாகவும், 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் 63 ரூபாய் 2 காசாகவும் விற்கப்பட்டது.

தொடர்ந்து, ஏற தொடங்கிய பெட்ரோலின் விலை கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் 71 ரூபாய் 78 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 78 ரூபாய் 46 காசாக உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS