'சேல்ஸ்' இல்லை: எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடியாக குறைப்பு !


இந்தியாவில் விற்கப்படும் சோனி நிறுவனத்தின் சில குறிப்பிடப்பட்ட எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான எக்ஸ்பீரியா XZ பிரீமியம் ஸ்மார்ட்போன் விலையில் ரூ.10,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.49,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZ பிரீமியம் மாடல் ரூ.59,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதேபோன்று எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.29,990-க்கு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.27,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.22,990-க்கு
விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா XA1 பிளஸ்
ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் எக்ஸ்பீரியா XA1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.24,990 விலைக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கடுமையான போட்டி நிலவி வருவதால், எக்ஸ்பீரியா போன்கள் அதிகமாக விற்பனையாகாத நிலையில் இந்த முடிவை சோனி நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS