199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ


199 ரூபாய்க்கு ஜியோ நிறுவனம் பல அதிரடி சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவையை தொடங்கிய நாளில் இருந்தே ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடி சலுகைகளை வழங்கி கவர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 199 ரூபாயில் புதிய சலுகையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது ஜியோ. 199 ரூபாய் சலுகையில் மாதம் ஒன்றிற்கு 25ஜிபி டேட்டா அத்தோடு இலவச வாய்ஸ் கால் மற்றும் அன்லிமிடெட் எஸ்எம்எஸ் ஆகியவை இந்தச் சலுகையில் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்திற்கு 50 காசுகள் முதல் 6 ரூபாய் வரை நாடுகளுக்கு ஏற்றவகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இச்சேவை வரும் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக ஜியோ தெரிவித்துள்ளது.

ஜியோவின் இந்தத் திட்டம் மற்ற போஸ்ட்பெய்ட் திட்டங்களை காட்டிலும் வித்தியாசமானது. அதாவது எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் தங்களது கட்டணத்தை தெரிந்து கொள்ளும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறும் வகையில் போர்ட்பிளிட்டி வசதியும் ஜியோவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரூ.575, ரூ.2875, ரூ.5,751 ஆகிய கட்டணங்களிலும் போஸ்ட்பெய்ட் இணைப்புகளுக்கு ஜியோ சலுகையை அறிமுகம் செய்யப்பட உள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS