1600 கோடியை மத்திய அரசிடம் செலுத்தியது நோக்கியா..!


வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நோக்கியா நிறுவனம் 1600 கோடியை மத்திய அரசிடம் செலுத்தியுள்ளது.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பை தொடங்கியது. இதனிடையே கடந்த 2013ம் ஆண்டு வரி ஏய்ப்பு பிரச்னையில் நோக்கியா நிறுவனம் சிக்கியது. இதனால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5,600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு என்கிற பெயரில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். வரி ஏய்ப்பு செய்த குற்றத்துக்காக நோக்கியா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டிருந்த‌ நிலையில் வரி ஏய்ப்பு தொகையை செலுத்த முடியாமல் நோக்கியா நிறுவனம் திணறி வந்தது. இதனையடுத்து நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. அதில் பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் நோக்கிய நிறுவனம் 1600 கோடியை மத்திய அரசிடம் செலுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக சென்னையில் உள்ள நோக்கியோ நிறுவனம் மூடப்பட்டிருந்த நிலையில் வரிஏய்ப்பு தொகையை மத்திய அரசாங்கத்திடம் நோக்கியா நிறுவனம் செலுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான பிரச்னைகளை விரைவில் இந்திய அதிகாரிகளுடன் பேசி தீர்க்க உள்ளதாக நோக்கியாவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS