ஃபிளிப்கார்ட்டை வாங்குகிறது அமேசான் !


'இப்பெல்லாம் யார் சார், வீட்டுக்கு தேவையான பொருளை கடையிலதான் வாங்குறா ? ஃபிளிப்கார்ட்ல ஆன்லைன்ல ஆர்டர் பண்ணா வீ்ட்டுக்கு வரபோகுதுனு' சொன்னவர்கள் கவனத்துக்கு. அந்த பிளிப்கார்ட் இணையதளத்தையே, மற்றொரு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசான் வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தியா மட்டுமல்லாமல் உலகில் இருக்கும் அனைத்து மக்களும் விரும்பும் ஆன் லைன் ஷாப்பிங் இணையதளம் அமேசான். இதற்கும் மற்றொறு ஷாப்பிங் இணையதளமான ஃபிளிப்கார்ட்டுக்கும் வியாபாரப் போட்டி எப்போதும் கடுமையாகவே இருக்கும். ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஃபிளிப்கார்ட் இணையதளம் நஷ்டத்தில் இயங்குவதாக தகவல் பரவியது. இதனையடுத்து அமெரிக்காவின் வால் மார்ட், கூகுல் ஆகிய நிறுவனங்கள் ஃபிளிப்கார்ட்டின் 40 சதவித பங்குகளை வாங்க தீவிரம் காட்டி வந்தன. இப்போது ஃபிளிப்கார்ட் இந்தியாவின் பங்குகளை முழுவதுமாக வாங்க அமேசான் நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS