மதுரை டூ சிங்கப்பூர்: இனி தினசரி விமான சேவை


மதுரையிலிருந்து இனி சிங்கப்பூருக்கு வாரத்தின் 7 நாட்களுக்கும் விமான சேவை தொடங்க உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மதுரை சர்வதேச விமானத்திலிருந்து துபாய் , இலங்கை , சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டுவருகின்றது . ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வாரத்தின் திங்கள் , புதன் , வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 4 நாட்கள் டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு  இரவு 10.15 மணி வந்து சேர்ந்து மீண்டும் 11.15 மணிக்கு மதுரையிலிருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு விமானம் செல்கின்றது. 
இந்நிலையில் வருகின்ற 27 ஆம் தேதி முதல் வாரத்தின் செவ்வாய் , வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மதுரை விமானநிலையத்திற்கு பகல் 11.15 மணிக்கு வரும் விமானம் மீண்டும் மதியம் 12.15 மணிக்கு மதுரை விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூரிலிருக்கு செல்ல உள்ளது . 
இதன் மூலம் 27 ஆம் தேதி முதல் வாரத்தின் 7 நாட்களுக்கும் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை கிடைக்க உள்ளதால் , மதுரை , தேனி , திண்டுக்கல் , விருதுநகர் , சிவகங்கை , இராமநாதபுரம் , தூத்துகுடி , திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயண ரீதியாகவும்  வணிக ரீதியாகவும் பயனடைவர் என கூறப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS