சென்னை உட்பட7 நகரங்களில் ‌வீடு விற்பனை 40% குறைந்தது


இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 7 பெரு நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த 4 ஆண்டுகளில் 40% குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. 

அனராக் என்ற சொத்து ஆலோசனை அமைப்பு நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டில் 3.3 லட்சம் வீடுகள் விற்கப்பட்டிருந்த நிலையில் 2017ல் இது 2 லட்சமாக குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 
கட்டுமானத் தாமதம், மூலதனத்தை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தல் உள்ளிட்டவையால் டெல்லி, சென்னை, மும்பை, புனே, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய ஏழு பெரு நகரங்களில் வீடு விற்பனை குறைந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS