மகளிர் தினம்: பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கிய பர்வீன் டிராவல்ஸ்!


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பர்வீன் டிராவல்ஸ் பெண்களுக்கு இலவச பயணச் சலுகை வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்களுக்கு சலுகைகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. அதன்படி, சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, இன்று 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை 5 நாட்களுக்கு பெண்களுக்கு இலவச பயணச் சலுகையை பர்வீன் டிராவல்ஸ் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ‘வாழ்நாள் முழுவதும் பெண்களுக்கு மரியாதை’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை பர்வீன் டிராவல்ஸ் கம்பெனி கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளிப்பதுடன், சிறந்த எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க பெண்களை ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும்.

இந்த இயக்கத்தின் கீழ், தென் மாநிலங்களில் இயக்கப்படும் பர்வீன் டிராவல்ஸ் பஸ்களில் பெண்களுக்கு மார்ச் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை 5 நாட்களுக்கு இலவச பயண சலுகை வழங்கப்படுகிறது. பர்வீன் டிராவல்ஸ் பஸ்கள் செல்லும் எல்லா நகரங்களுக்கும் பெண்களுக்கு இந்த இலவச பயண சலுகை கிடைக்கும். இலவச பயணத்துக்கு, பின் வரும் நம்பரில் பேசி, முன் பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் புறநகர் பஸ் சேவையை தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, 50 ஆண்டுகளில் தென்மாநிலங்களின் முன்னணி போக்குவரத்து சேவை நிறுவனமாக பர்வீன் டிராவல்ஸ் உயர்ந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS