ஏர்டெல் 2000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்


ஏர்டெல் நிறுவனம் 2000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் அறிவித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல ஆஃபர்களை அறிவித்து வருகிறது. ஆகவே பல நிறுவனங்கள் தங்களை சந்தையில் தக்க வைத்துக் கொள்ள பல புதுப்புது ஆஃபர்களை அள்ளி தெளித்து வருகின்றனர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் ஆரம்பகட்ட வெளியீடுகளான நோக்கியா 2 மற்றும் நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு .2000 ரூபாய்க்கான  கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் கீழ், நோக்கியா 2 ஸ்மார்ட்போனை ரூ.6,999க்கு பதிலாக ரூ.4,999க்கும் மற்றும் நோக்கியா 3 ஸ்மார்ட்போனை ரூ.9,499க்கு பதிலாக ரூ.7,499க்கும் வாங்கலாம். 

இந்த கேஷ்பேக் சலுகை உடனே கிடைக்காது. கேஷ்பேக்கை பெற மொத்தம் 36 மாதங்களுக்கு நீங்கள் ரிச்சார்ஜ் செய்ய வேண்டும். அந்த 36 மாதங்களில் இரண்டு தவணைகளில் வாடிக்கையாளர்களுக்கு 2,000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும். இரண்டாம் தவணையின் கீழ் 1500 ரூபாய் கேஷ்பேக் அதாவது ஒரு வாடிக்கையாளர் 500 ரூபாய் என்கிற முதல் தவணை கேஷ்பேக்கை பெற முதல் 18 மாதங்களுக்கு 3500ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ்களை செய்ய வேண்டும். அதே போல அடுத்த 18 மாதங்களில் 3,500 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் செய்ய இரண்டாம் தவணையின் கீழ் 1500 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். 

POST COMMENTS VIEW COMMENTS