கண்களை கவரும் கார்கள்.... ஆட்டோ எக்ஸ்போ 2018..!


நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் பல முன்னணி நிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ‘ஆட்டோ எக்ஸ்போ 2018’ வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவமான ஹூண்டாய் நிறுவனம் தனது புதுப்பிக்கபட்ட மாடலான ஹூண்டாய் ஐ20 வகை காரை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் பயன்படுத்தப்படும் இந்த வகை காரின் விலை ரூபாய் 5.34 லட்சம் முதல் ரூபாய் 7.90 லட்சம் வரை உள்ளது. அதேசமயம் டீசல் பயன்பாடு கொண்ட இந்த வகையிலான காரின் விலை ரூபாய் 6.73 லட்சம் முதல் ரூபாய் 9.15 லட்சம் வரை உள்ளது.

ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமாக ஹோண்டாவும், தனது புதிய மாடல் கார்களை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. ஐந்தாவது தலைமுறை சிஆர் -வி, 10-வது தலைமுறை சிவிக் மற்றும் 2-வது தலைமுறை அமேஸ் ஆகிய இந்த கார்கள் பழைய வடிவில் இருந்து தரம் உயர்த்தப்பட்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா, ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் புதிய மாருதி சுசுகி கான்செப்ட் ஃப்யூச்சர்-S மாடலை  அறிமுகப்படுத்தியுள்ளது. பல நிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு தங்களது கார்களை அறிமுகம் செய்வதால், கண்காட்சி கண்கவர் கண்காட்சியாக மாறி உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS