இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி


சர்வதேசப் பங்குச் சந்தைகளின் எதிரொலியாக இந்திய சந்தைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன.

மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ்‌ ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 300 புள்ளிகளுக்கு அதிகமாகவும் வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகின்றன. காலை 10 மணியளவில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,144 புள்ளிகள் சரிந்து 33,640 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 337 புள்ளிகள் இறங்கி 10,329 புள்ளிகளிலும் வணிகமாகிற‌து.

சர்வதேச சந்தைகளின் வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்வது உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய வர்த்தகம் தொடங்கிய சில விநாடிகளில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS