விலைவாசி குறையுமா..? மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்


2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.

ஜிஎஸ்டி வரி அமலாக்கத்திற்கு பின்னும், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி குறைய நடவடிக்கை, வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.

ஜிஎஸ்டி நடைமுறை எளிமையாக்கம், கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய அதே சமயம் அரசின் நிதிப்பற்றாக்குறையை 3 சதவிகிதத்திற்குள் குறைக்க வேண்டிய நிர்பந்தத்திலும் நிதியமைச்சர் உள்ளார். இப்படிப்பட்ட சூழலில் பட்ஜெட் தாக்கலாகிறது

POST COMMENTS VIEW COMMENTS