கூல்பேட் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6000 தள்ளுபடி..!


கூல்பேட் நிறுவனத்தின் 3 வகையான ஸ்மார்ட்போன்கள் ரூபாய் 6000 வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

கூல்பேட் நிறுவனம் தனது மூன்று வகையான ஸ்மார்ட்போன்களுக்கு ரூபாய் 6,000 வரை தள்ளுபடி விலை அறிவித்துள்ளது. அதன்படி, கூல்பேட் கூல் 1 டூயல், கூல்பேட் நோட் 5, கூல்பேட் நோட் 5 லைட் ஆகிய ஸ்டார்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

கூல்பேட் கூல் 1 டூயல் (3ஜிபி ரேம்+ 32 ஜிபி இன்டர்னல் மெமரி) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை ரூபாய் 11,999. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூபாய் 4,000 விலை தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக இதன் தற்போதைய விலை ரூ.7,999.  அதபோல் கூல்பேட் கூல் 1 டூயல் (4ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னெல் மெமரி) ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை  ரூ.8,999. ஏற்கனவே இருந்த 14,999 ரூபாய் என்ற விலையிலிருந்து ரூ.6,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூல்பேட் நோட் 5 ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூபாய் 7,999. (தள்ளுபடிக்கு முன் விலை ரூபாய் 11,999). கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூபாய் 5,999. தள்ளுபடிக்கு முன் இதன் விலை ரூபாய் 8,999 ஆகும். மலிவு விலையால் கூல்பேட் ஸ்மார்ட்போன்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள் என்று கூல்பேட் இந்தியா நிறுவனத்தில் சிஇஓ சையத் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS