அமேசானின் ‘கிரேட் இந்தியன் சேல்’ ஆரம்பம்!


மக்களிடன் பெரும் வரவேற்பை பெற்ற அமேசான் நிறுவனத்தின் ‘கிரேட் இந்தியன் சேல்’  ஜனவரி 21 முதல் ஆரம்பமாகிறது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கும் அமேசான் நிறுவனத்தின் ‘கிரேட் இந்தியன் சேல்’  ஜனவரி 21 முதல் 24 வரை நடைபெறுகிறது. இதில், நம்பர் 1 நிறுவனங்களின் மொபைல்கள், லேப்டாப்கள், டிவி, கேமரா என அனைத்து விதமான வீட்டுப் உபயோக பொருட்களும் ஆஃபரில் இடம்பெற உள்ளன. ஜனவரி 20 மதியம் 12. மணி முதலே, அமேசானின் கிரேட் இந்தியன் சேலில் ஷாப்பிங் செய்துக் கொள்ளலாம். 

இந்த விற்பனையில், எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டை பயன்படுத்துவோர்க்கு, 10% கேஷ் பேக் வழங்கப்படுகிறது. அதே போல், வாடிக்கையாளர்களுக்கு ஈஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் முறைகளுக்கு வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அமேசானின் இந்த கிரேட் இந்தியன் சேலில் விலைக்குறைக்கப்பட்டுள்ள மொபைல் போன்களின் பெயர்கள்:

ஹானர் 6X, சாம்சங் ஆன்5 ப்ரோ, மோட்டோ G5S ப்ளஸ், பிளாக் பெர்ரி கிஓன், எல்ஜி Q6, லெனவோ k8 நோட், இன்டெக்ஸ் க்ளவூட் C1, கூகுள் பிக்செல் XL, மைக்ரோமேக்ஸ், ஆப்பிள் போன்ஸ்.

POST COMMENTS VIEW COMMENTS