பூக்கள் விலை திடீர் உயர்வு


பூக்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

பண்டிகை காலங்களில் பூக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது வழக்கம். நாளை பொங்கல் பண்டிகை என்பதால் பூக்கள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வரத்துக் குறைவு மற்றும் பொங்கல் பண்டிகை காரணமாக மல்லிகை பூ விலை உயர்ந்து, கிலோ 800-க்கு விற்கப்படுகிறது. 

தருமபுரி பூக்கள் சந்தைக்கு மல்லிகை பூ வரத்து குறைந்து விட்டது. இதனால் கடந்த சில நாட்களாகவே மல்லிகை பூ விலை உயர்ந்தே காணப்பட்டது. தற்பொழுது பண்டிகை என்பதால், பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. கனகாம்பரம், முல்லை, ஊசிமல்லி பூக்கள் அனைத்துமே விலை உயர்ந்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS