ஜியோவின் புதிய சலுகைகள்!


ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், புத்தாண்டு ஆஃபராக சில சலுகைகளை அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும், ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புத்தாண்டு ஆஃபராக புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்களின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. இந்நிலையில், விலை குறைத்துள்ள திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பட்டியல் வெளியாகி உள்ளது. இதன்படி, இதுவரை இருந்து வந்த ரூ. 199 திட்டம் ரூ. 149 யாகவும், ரூ. 399 திட்டம் ரூ 349 யாகவும், ரூ.459 திட்டம் ரூ. 399 யாகவும் இறுதியாக ரூ. 499 திட்டம் ரூ. 449 யாக மாற்றி அறிவித்துள்ளது. அதே போல் நாள் ஒன்றுக்கு 1. 5 ஜிபி டேட்டா வழங்கக்கூடிய நான்கு புதிய திட்டங்களும் இன்று முதல் ஆரம்பமாகிறது. 

எனவே, விலை குறைத்துள்ள திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும், சலுகைகள் குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது.  இதன்படி, ரூ. 149 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு செயல்படும் 4ஜி வேகத்தில் மொத்தம் 28ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ்கால் மற்றும் குறுஞ்செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே போல், ரூ. 349 க்கு ரீசார்ஜ் செய்தால், 70 நாட்களுக்கு செயல்படும் மொத்தம் 70ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ்கால் மற்றும் குறுஞ்செய்திகளையும் பயன்படுத்தலாம்.  மேலும், ரூ. 399 க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 4 ஜி வேகத்தில் மொத்தம் 84 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாத வாய்ஸ்கால் மற்றும் குறுஞ்செய்திகளையும் பயன்படுத்தலாம். விலைக் குறைப்பில் அறிவித்துள்ள இந்த 4 திட்டங்களிலும் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS