ஜியோவின் அடுத்த அதிரடி : ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா


ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு ஆஃபராக புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில், ஜியோவின் வருகைக்கு பின்னர், பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் ஆகிய நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ரீசார்ஜ் திட்டங்களில் புதிய அறிவிப்புகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் புத்தாண்டு ஆஃபராக புதிய அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.  

அதன்படி, ரூ.198 மற்றும் அதற்குமேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது. இதன்படி, ஜியோவின் 4 திட்டங்களில் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ரூ. 198, ரூ. 398, ரூ. 448, ரூ. 498 ஆகிய நான்கு திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்கள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஜியோவின் இந்த அதிரடி திட்டம் நாளை முதல் (9.01.18) ஆரம்பமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தற்போது செயல்பட்டு வரும் ஜியோவின் ரூ.199, ரூ. 399, ரூ. 459, ரூ.499 ஆகிய திட்டங்களின் விலைகளும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. விலை குறைக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களில் எப்போதும் போல் நாள் ஒன்றுக்கு 1.ஜிபி டேட்டா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு ஆஃபராக ஜியோ அறிவித்துள்ள இந்த புதிய சலுகை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 

POST COMMENTS VIEW COMMENTS