அன்னிய முதலீட்டால் பங்குச் சந்தை புதிய உச்சம்


இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டின. 

நேற்றைய நாளின் இறுதியில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவடைந்தது. இதனால் பங்குச் சந்தைகள், வர்த்தகத்தின் இடையில் 205 சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்து 34,175 புள்ளிகளில் இருந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 176 புள்ளிகள் அதிகரித்து 10,562 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. இந்த மதிப்பு இன்றைய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. வங்கிகளுக்கான மறுமூலதன அளிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களால் அன்னிய முதலீடு அதிகரித்ததே சந்தைகள் உயர்வுக்கு முக்கிய காரணம் ‌ஆகும். 
 

POST COMMENTS VIEW COMMENTS