முட்டை விலை உயர்வு!


நாமக்கல்லில் இன்று ஒரே நாளில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது.  

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் மற்றும் தமிழகத்தில் தேவை அதிகரித்துள்ளதால் மீண்டும் முட்டை விலை உயரத்தொடங்கியுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். 3 ரூபாய் 75 காசுகளாக இருந்த கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக உயர்ந்துள்ளது. மேலும், வறட்சியால் பெரும்பாலான‌ கோழிகள் விற்கப்பட்டதும் இந்த விலை உயர்வுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. எனவே, இதன் எதிரொலியாக  நாள் ஒன்றுக்கு 3 கோடியாக இருந்த முட்டை உற்பத்தி 20 லட்சம் வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனைத்தொடர்ந்து, முட்டையின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்தால் சந்தையில் வியாபாரம் குறைய வாய்ப்புள்ளதாக சிறு தொழில் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

POST COMMENTS VIEW COMMENTS