ஏர்டெல் அதிரடி சலுகை: வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3.5 ஜிபி டேட்டா


ஏர்டெல் நிறுவனம் ரூ.799 பிளானில் நாள் ஒன்றுக்கு 3.5 ஜிபி அளவிலான டேட்டாவை வாடிக்கையாளருக்கு வழங்குகிறது.

டெலிகாம் மார்க்கெட்டில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து இந்த நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஜியோவின் ரூ.799 பிளானைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் ரூ.799 பிளானில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி ரூ.799 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3.5 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடந்த வருடம் அறிமுகமான இந்த திட்டத்தில் முதலில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்கி வந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது நாள் ஒன்றுக்கு 3.5 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 28 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில் மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு 98 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன், அளவில்லாத லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை அளிக்கிறது. மேலும், 100 லோக்கல் குறுஞ்செய்திகளையும் தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஜியோவின் ரூ.799 ரீசார்ஜ் பிளான் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஏர்டெல்லின் இந்த புதிய சலுகை மக்களிடம் வரவேற்பை பெறுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

POST COMMENTS VIEW COMMENTS