பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை


பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிட்காயின் எனப்படும் இணையதள வழி பணம் சட்ட அங்கீகாரம் பெற்றதல்ல எனக் கூறி மத்திய நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிட்காயினில் முதலீடு செய்து இழப்பை சந்திப்பவர்களுக்கு எவ்வித சட்டப்பாதுகாப்பும் இருக்காது என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் பிட்காயின் பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கு உண்மையான மதிப்பு என எதுவும் கிடையாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS