புதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குச் சந்தைகள்


இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவாக 34 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃடியும் புதிய உச்சமாக 10 ஆயிரத்து 515 என்ற புள்ளிகளை எட்டியிருக்கிறது.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதே ‌பங்குச் சந்தைகள் புதிய உயர்வை எட்டியதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தில் தொழில்நுட்பம், எண்ணெய், ‌எரிசக்தி துறைகளின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. ஓ.என்.ஜி.சி, டாக்டர் ரெட்டி மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சுமார் ஒன்றரை சதவிகிதம் வரை உயர்ந்து வர்த்தகமாகின்றன.

POST COMMENTS VIEW COMMENTS