ஹூண்டாய் கார்களின் விலை உயர்கிறது..!


ஹூண்டாய் நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலைகளையும் அடுத்த ஆண்டு முதல் உயர்த்த உள்ளது.

கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் பல்வேறு மாடல் கார்களை விற்பனைக்கு விட்டு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்ற நிறுவனம் ஆகும். எக்ஸ்சென்ட், எலைட் ஐ20, க்ரெட்டா, சான்டா -ஃபே உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் வரிசையில் சமீபத்தில் வெளியான வெர்னா மாடல் பல சிறம்பம்சங்களை கொண்டிருந்தது.

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலைகளையும் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி முதல் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. விலை அதிகரிப்பு குறித்து ஹூண்டாய் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 2 சதவீதம் வரை விலை உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் நிசான், மாருதி சுசூகி இந்தியா, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய மாடல்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS