ஜியோவின் அதிரடி ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபர் தேதி நீட்டிப்பு!


ரிலையன்ஸ் ஜியோ அளித்து வந்த ட்ரிபிள் கேஸ்பேக் ஆஃபரின் தேதி டிசம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ரீசார்ஜ் திட்டங்கள், சலுகை திட்டங்கள், 100% கேஷ்பேக் ஆஃபர், ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபர் என அடுத்தடுத்து அதிரடியான பல அறிவிப்புகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஜியோவின் ப்ரைம் வாடிக்கையாளர்களில் ரூ.399 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபரை வழங்கி வந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் கூப்பன்கள், டிஜிட்டல் வாலட்கள் மூலம் ரூ.2,599 வரை கேஷ்பேக் ஆஃபரை பெற்று வந்தனர். இந்த ட்ரிபிள் கேஸ்பேக் ஆஃபர் நவம்பர் 25 - டிசம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே நீட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஜியோவின் அதிரடியான ட்ரிபிள் கேஸ்பேக் ஆஃபர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிசம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை அளிக்கபட்டு வந்த கேஷ்பேக் ஆஃபரில் மட்டும் கூடுதலாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.399 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் மை ஜியோ அல்லது ஜியோ.காம் வெப்சைட்டில் ரூ.400-க்கு (8X50) ரீசார்ஜ் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அமேசான் பெயில் ரீசார்ஜ் செய்யும் போது 450 ரூபாய் வரை பெற்றுக்கொள்ள முடியும்.

AJIO தளத்தில் ரூ.1,500 பணப்பரிமாற்றம் செய்யப்படும் போது ரூ.399 தள்ளுபடியாக வழங்கப்படுகிறது . அதேபோல் யாத்ரா.காம் தளத்தில் அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் ரவுண்டு டிரிப் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ரூ.1000 தள்ளுபடியும், ஒருவழி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் தளத்தில் ரூ.1,899 மற்றும் அதற்கும் அதிகமான தொகை செலுத்தி பொருட்களை வாங்கும்போது ரூ.500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS