ஆதார் டேட்டாவை தவறாகப் பயன்படுத்துவதா? ஏர்டெல் மீது நடவடிக்கை!


வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, அவர்கள் அனுமதியின்றி டிஜிட்டல் பாங்க் கணக்குகளை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியதை அடுத்து, அதன் இ-கேஒய்சி உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிம் கார்டுகளுக்காக வழங்கப்படுகிற ஆதார் எண்களைப் பயன்படுத்தி, ஏர்டெல் பேமென்ட்ஸ் பாங்க் இதுபோன்று வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளது. 23 லட்சம் பேரின் ஏர்டெல் பேமென்ட்ஸ் பாங்க் கணக்குகளில், வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், ரூ.47 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்டவை கூட வாடிக்கையாளர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாமல், ஏர்டெல் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் ஆதார் ஆணையத்துக்கு சென்றதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் இது உண்மை என்று தெரியவந்ததை அடுத்து, ஏர்டெல் நிறுவனத்தின் இ-கேஒய்சி (e-KYC -Electronic Know Your Customer) உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை செல்போன்களுடன் இணைக்கும் பணியை ஏர்டெல் நிறுவனம் மேற்கொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS