உளுந்து, பாசிப்பருப்பு விலை திடீர் உயர்வு


விருதுநகர் சந்தையில் உளுந்து மற்றும் பாசிப்பருப்பின் விலை உயர்வடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பொங்கல் பண்டிகைக்காக முன்கூட்டியே வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் உளுந்து மற்றும் பாசிப்பருப்பின் விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

வெளிமாநில வியாபாரிகள் இருப்பு வைப்பதற்காக அதிகளவில் கொள்முதல் செய்வதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் 61 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ உளுந்தம்பருப்பு, இந்த வாரம் 66 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 54 ரூபாய்க்கு விற்பனையான பாசிப்பருப்பின் விலை 64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS