டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் இந்தியாவில் அறிமுகம்


10 விநாடி டீசரில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தில் அப்பாச்சி RR310 பைக் இந்தியாவில் அறிமுகமானது.

2016 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட Akula 310 எனும் கான்செப்ட் பைக், தற்போது அப்பாச்சி  RR310 ஆக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் இந்த பைக் குறித்து வெளியான 10 விநாடி டீசர், பைக் பிரியர்களிடம் பெரும் கவனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இந்த பைக்கின் துவக்க விழா நடைபெற்றது.

இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள சிறப்பசங்கள் குறித்த பட்டியலை டிவிஎஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. Omega வடிவிலான LED டெயில் லைட், இரட்டை LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் LED இண்டிகேட்டர்கள். அதனைத்தொடர்ந்து, ஹெட்லைட் அருகே Bi-LED மற்றும் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரால் செய்யப்பட்டுள்ள இந்த பைக் அனைவரையும் வெகுவாக கவரும் என்றும் டிவிஎஸ் நிறுவனர், வினய் ஹர்னே தெரிவித்துள்ளார். 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக்கின் விலை இந்தியாவில் ரூ.2.5 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் ஜொலித்த இந்த அப்பாச்சி RR310 பைக் விற்பனையில் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

POST COMMENTS VIEW COMMENTS