ஏர் இந்தியா பங்குகளை டாடா வாங்குகிறதா?


ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க டாடா குழுமம் முறைப்படி ஆர்வம் ஏதும் தெரிவிக்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார். 

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருக்கிறது என்றும் அதை சரிக்கட்டும் விதமாக. ஏர் இந்தியா பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், டாடா குழுமம் ஏர்இந்தியாவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியானது. இதை மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மறுத்துள்ளார்.

இண்டிகோ நிறுவனம் மட்டுமே இதுவரை முறைப்படி ஏர் இந்தியா பங்குகளை வாங்க கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS