ஒரு ரூபாய் நோட்டுக்கு வயது 100


ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்‌படுத்தப்பட்டு இன்றுடன் 1‌00 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

முதன்முதலில் 191‌7ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி ஒரு ரூபாய்‌ நோட்டு அறிமுகமானது. ‌அதற்கு முன்பு ஒரு ரூபாய் வெள்ளி நாண‌யமே புழக்கத்தில் இருந்தது. ஆனால் முதலாவது உலகப்போரின் போது வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாணயத்தை அச்சிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்துடன் கூடிய ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.

அதன் பின்பு அவ்வப்போது ஒரு ரூபாய் நோட்டின் அச்சிடும் பணிகள் நிறுத்தப்படுவது, சில நேரங்களில் அதன் தோற்றமும் மாற்றம் காண்பது என ஒரு ரூபாய் நோட்டு நூற்றாண்டு கண்டுள்ளது. மற்ற நோட்டுகளை போல இந்த ரூபாய் நோட்டுகளை ரிச‌ர்வ் வங்கி வெளியிடுவதில்லை. இதை மத்திய அரசே வெளியிடுகிறது. இதன் காரணமாகவே இந்த நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துக்கு பதில் மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெறுகிறது. மேலும் பழைய ரூபாய் நோட்டுக்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இன்று வரை தங்களின் வீடுகளில் ஒரு ரூபாய் நோட்டுகளை சேகரித்து வைத்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS