ஜீரோ பேலன்ஸில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை


ஜீரோ பேலன்ஸ் கணக்குகளுடன் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பொறுத்த வரையில் பேடிஎம் செயலி மக்கள் மத்தியில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி துவக்கி வைத்துள்ளார். இதற்காக நடைபெற்ற விழாவில் பேசிய பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சிஇஓ ரேனு ரெட்டி, இந்திய பணப்பரிவர்த்தனையில் பேடிஎம் பெரும் வகிக்கப்போகிறது என்று தெரிவித்தார்.

அத்துடன் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஜீரோ பேலன்ஸில் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்றும், அத்துடன் ஜீரோ கட்டண பணப்பரிவர்த்தனை சேவை வழங்கப்படும் என்றும் கூறினார். இவற்றுடன் இலவசமாக ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும் என்றும், சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 4 முதல் 7 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் 500 மில்லியன் வங்கி கணக்குகளை எட்டுவதே தங்கள் இலக்கு என்றும் கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS