அதீத லாப தடுப்பு ஆணையத்திற்கு தலைவர் நியமனம்


ஜிஎஸ்டி வரி நடைமுறையை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணையத்துக்கு தலைவராக பத்ரிநாராயண் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த மூத்த மத்திய அரசு அதிகாரியான ஷர்மா, தற்போது வருவாய்த்துறை கூடுதல் செயலாளராக உள்ளார். 

ஜிஎஸ்டி நடைமுறையின் ஒரு பகுதியாக அதீத லாப தடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட இந்த ஆணையத்திற்கு ஷர்மா தலைமை வகிப்பார். மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கும் ஜிஎஸ்டி வரிக் குறைப்பின் பலன் மக்களுக்கு சென்று சேர்கிறதா என்று இந்த ஆணையம் கண்காணிக்கும். குறிப்பிட்ட ஒரு வணிகர் வாடிக்கையாளருக்கு வரிக் குறைப்பின் பலனை தராவிட்டால் கூடுதலாக வசூலித்த பணத்தை 18% வட்டியுடன் அபராதத்தையும் சேர்த்து தர அதீத லாப தடுப்பு ஆணையத்தின் விதிகள் வழி செய்கின்றன

POST COMMENTS VIEW COMMENTS