பெரு நிறுவனங்களின் கடன் தள்ளுபடியா? அருண் ஜெட்லி மறுப்பு


பெரு வணிக நிறுவனங்களின் வராக்கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ததாக வெளியான தகவல்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துள்ளார்.

பெரு வணிக நிறுவனங்கள் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும் இவை வெறும் வதந்தி மட்டுமே என்றும் ஜெட்லி விளக்கம் அளித‌துள்ளார். 

தற்போது வராக்கடன்களாக மாறிய வங்கிக் கடன்கள் அனைத்தும் 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுகளில் தரப்பட்டவை என்றும் அப்போது ஆட்சி செய்தது யார் என வதந்தி பரப்புபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் தனது பிளாக்-கில் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

12 பெரும் தொழில் நிறுவனங்கள் பெற்ற ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் வராமல் போயுள்ளதாகவும் அதைத் திரும்ப வசூலிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS