ஜி.எஸ்.டி-யால் விற்பனை குறைவு: தோல் வியாபாரிகள் வேதனை


ஜி.எஸ்.டி வரி விதிப்பால் தோல் சந்தையில் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் சாந்திநகர் அருகே வாரம் ஒருமுறை தோல் சந்தை கூடும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெட்டப்படும் ஆடுகளின் தோல்கள் இங்குள்ள சந்தைக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரம் நடக்கும். இந்த நிலையில் தற்போது தோலுக்கு போதிய விலை இல்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 10 ரூபாய்க்கு பெறப்படும் தோலானது வடிவமைப்பு செய்ய 50 முதல் 60 ரூபாய் வரை ஆகிறது. 
கடந்த இரண்டு வருடமாக இந்த தொழிலானது போதிய லாபம் ஈட்ட கூடிய வகையில் இல்லை எனவும், பரம்பரையாக இந்த தொழில் செய்பவர்கள் வேறு வழியின்றி இதனை செய்து பிழைப்புக்காக செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

வெள்ளாடு 150 முதல் 200 விற்பனையான நிலையில் தற்போது 60 முதல் 100 முதல் வரை மட்டுமே விற்பனையாவதாகக் கூறுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரித்ததாலும், ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதாலும் போதிய விலை இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS