ஐயப்பன் கோயில் சீசன்: முட்டை விற்பனை சரிவு


நாமக்கல்லில் தொடர்ந்து இரண்டாவது நாளாக முட்டையின் கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து, 4 ரூபாய் 85 காசுக்கு விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களில் முட்டையின் கொள்முதல் விலை 31 காசுகள் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதமாக முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 16ஆம் தேதியன்று ஒரு முட்டையின் விலை 5 ரூபாய் 16 காசுக்கு விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், அதிகபட்ச விலை மற்றும் ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியிருப்பது உள்ளிட்ட காரணங்களால் முட்டை விற்பனை சரிவடைந்துள்ளது. இதனால் முட்டையின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS