விற்பனை சரிவால் முட்டை விலை குறைந்தது


முட்டை விற்பனை சரிவு காரணமாக நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை 11 காசுகள் குறைக்கப்பட்டு 5 ரூபாய் 5 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி முன் எப்போதும் இல்‌லாத அளவுக்கு ஒரு முட்டையின் விலை 5 ரூபாய் 16 காசுக்கு விற்கப்பட்டது. இதனையடுத்த அதிகபட்ச விலையால் முட்டை விற்பனை சரிவடைந்து தேக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை 11 காசுகள் குறைக்கப்பட்டு 5 ரூபாய் 5 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்‌. முட்டையின் விலை வரும் நாட்களில் மேலு‌ம் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS