கனரா வங்கியின் 'காபி வித் கஸ்டமர்'


கனரா வங்கியின் 112ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் வங்கி அதிகாரிகள் வா‌டிக்கையாளர்களுடன் கலந்துரையாடும் விதமாக 'காபி வித் கஸ்டமர்' என்ற ‌நிகழ்ச்சி நடைபெற்றது.

கனரா வங்கியின் நிறுவனர் அம்மேம்பால் சுப்பாராவ் பாய்-யின் பிறந்தநாளை முன்னிட்டு நிறுவனர்கள் விழா சென்னை தேனாம்பேட்டையிலுள்ள கனரா வங்கியில் நடைபெற்றது. இந்த விழாவில், கனரா வங்கியின் நிறுவனர் மனோகரன் கலந்துகொண்டு நடமாடும் ஏடிஎம் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் காணொலி காட்சி மூலம், கோவையில் சிறப்பு என்.ஆர்.ஐ வங்கியையும், எஸ்.எம்.இ வங்கியையும் தொடங்கி வைத்தார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு முத்ரா மற்றும் ஸ்டேன்ட் ஆப் இந்தியா திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கினார். பின்னர் வங்கி அதிகாரிகள் வா‌டிக்கையாளர்களுடன் கலந்துரையாடும் விதமாக 'காபி வித் கஸ்டமர்' என்ற ‌நிகழ்ச்சியும் நடைபெற்றது.

POST COMMENTS VIEW COMMENTS