வீடு, நில விற்பனை ஜிஎஸ்டி வரம்புக்குள்‌ வருகிறது?


நிலம் மற்றும் வீடு விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக அடுத்த‌ கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுமென்றும் தெரிகிறது. பதிவுக்கட்டணம் உள்ளிட்டவை அதிகம் இருப்பதால் நிலம் மற்றும் வீடுகள் ஜிஎஸ்டி வரம்புக்கு வர வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிலம் மற்றும் வீடுகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS