நாட்டில் 6 மாதங்களில் இல்லாத பணவீக்கம்


நாட்டின் மொத்த‌விலை‌ பணவீக்க விகிதம் 6 மாதங்களி‌ல் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. 

கடந்த அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 3.59 சதவிகிதமாக இருந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இந்தப் பணவீக்கம் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம், முட்டை, ‌இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகரித்ததே இந்தப் பணவீக்க உயர்வுக்கு காரணம் என அரசு விளக்‌கம் அளித்துள்ளது. 

முன்னதாக நுக‌ர்வோர் நிலை பணவீக்கமும் 7 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்திருந்ததாக ‌அரசு தெரிவித்திருந்தது. தற்போது பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பது பணவீக்கம் சற்றே குறைய வழிவகுக்கும் என ஆய்வு‌ ஒன்று தெரிவிக்கிறது. இதற்கிடையில் கடந்‌த அக்டோபர் மாதம் நாட்டின் ஏற்றுமதி 1.12% குறைந்து வர்த்தக பற்றாக்குறை பெருகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ள‌து.
 

POST COMMENTS VIEW COMMENTS