ஜி.எஸ்.டி வரி மேலும் குறைகிறது: அருண் ஜெட்லி சூசகம்!


ஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரை தேர்தல் டிசம்பரில் நடைபெறுகிறது. இந்நிலையில், 200 க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி, 28 ல் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ’ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு நடைமுறைகள் தொடரும். வரும் காலங்களில் வருவாய் மிதப்பு (revenue buoyancy) நிலையை பொறுத்து இந்த சீரமைப்பு இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் மேலும் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS