ரிலையன்ஸ்‌ கம்யூ. சேவை டிச.1 முதல் நிறுத்தம்: வோடஃபோன் அழைப்பு


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது செல்ஃபோன் குரல் வழி சேவையை வரும் 1ம் தேதியுடன் நிறுத்த உள்ள நிலையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் நிறுவனம் சிறப்பு சலுகைகள் அளிப்பதாக கூறி அழைப்பு விடுத்‌துள்ளது. இதே போன்று ஏர்டெல் நிறுவனங்களும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் அழைப்பு விடுத்துள்ளன. தங்கள் சேவை டிசம்பர் 1ம் தேதியுடன் நிறுத்தப்படுவதால் டிராய் விதிமுறைகள் படி தங்கள் வாடிக்கையாளர்கள்‌ பிற நிறுவன சேவைகளில் இணைந்து கொள்ளலாம் என அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS