177 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு


அசாமில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 177-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்களின் மீதான வரி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளுக்கு செலுத்தப்படும் கமிஷன் மீதான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட் உட்பட பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள், ஆடம்பரப் பொருட்களை 28% வரிப் பிரிவில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS