இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வாட்ச், சோப்பு விலை குறைகிறது


அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அன்றாட பயன்பாட்டுக்கான 200 பொருட்களின் வரி குறைக்கப்படும் என்று பீகார் துணை முதலமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக 28 சதவிகித வரி விதிப்பில் உள்ள பொருட்களில் 80 சதவிகித பொருட்கள் 18 சதவிகித வரி விதிப்பில் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், குளியலறை பொருட்கள், கைக்கடிகாரம், சூட்கேஸ், வால்பேப்பர், ப்ளைவுட், எழுதுபொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் வரி குறைக்கப்பட உள்ளதால், அவற்றின் விலை கணிசமாக குறையவுள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS