தேங்காய் விலை கடும் உயர்வு


கடலூரில் தேங்காய் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக மக்கள் ‌கவலையுடன் தெரிவித்துள்ளனர்.  

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 12 ரூபாய் வரை விற்ற தேங்காய் தற்போது 35 ரூபாய் வரை விற்பதால் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்காயின் உற்பத்தி குறைந்ததே விலை ஏற்றத்துக்குக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.அதே போல் தங்களிடம் இருந்து 15 ரூபாய்க்கு மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்வதாகவும், சில்லறை விலையில் ஒரு தேங்காய்க்கு 20 ரூபாய் வரை லாபம் வைத்து விற்பதாகவும் விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
 

POST COMMENTS VIEW COMMENTS