ஓராண்டாகியும் இன்னும் முடியவில்லை பழைய ரூ.500, 1000 நோட்டுகளை எண்ணும் பணி..!


பணமதிப்பு நீக்கத்திற்கு பின் திரும்பப் பெறப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணி சரிபார்க்கும் பணி இன்னும் முடிவடையவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியாகி ஏறத்தாழ ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் ரிசர்வ் வங்கியின் இத்தகவல் வெளியாகியுள்ளது.

பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி 10 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பலான 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் எண்ணப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் பதிலில் கூறப்பட்டுள்ளது. 66 எண்ணும் இயந்திரங்கள் மூலம் இரு ஷிஃப்டுகளில் இன்னும் எண்ணும் பணி நடந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS